ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்

ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-08 07:52 GMT
புதுடெல்லி,

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி அவரது இல்லத்தில் இன்று காலை 7.45 மணியளவில் காலமானார். 95 வயதான அவர் சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ராம் ஜெத்மலானியின் மறைவை அடுத்து அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்