கடுமையான விலை உயர்விலும் தங்கத்துக்கான இறக்குமதி வரியை குறைக்க முடியாது - நிர்மலா சீதாராமன் உறுதி

கடுமையான விலை உயர்விலும் தங்கத்துக்கான இறக்குமதி வரியை குறைக்க முடியாது என நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-17 23:15 GMT
ஆமதாபாத்,

நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது. ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு சுமார் ரூ.29 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், தங்கத்துக்கான இறக்குமதி விலையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் குஜராத்தின் ஆமதாபாத்துக்கு சென்ற நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், இறக்குமதி வரியை குறைக்க முடியாது என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நகை செய்தல் உள்ளிட்ட மதிப்பு கூட்டு நடவடிக்கைகளுக்காக தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை போல தங்கமும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. நாம் வாங்கும் ஒவ்வொரு தங்கமும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக செலவிடப்படும் அன்னிய செலவாணியின் அளவை நாம் பார்க்க வேண்டும். நான் அதை தள்ளு படி செய்ய முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்