கங்கையில் புனிதநீர் எடுக்கச்சென்ற 4 பக்தர்கள் விபத்தில் பலி

கங்கையில் புனிதநீர் எடுக்கச்சென்ற 4 பக்தர்கள் விபத்தில் பலியாகினர்.;

Update:2019-08-04 01:25 IST
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த 15 சிவபக்தர்கள், கங்கை நதியில் புனிதநீர் எடுத்துவர சென்றனர். ஒரு டிராக்டரில் ஆக்ராகுவாலியர் சாலையில் அவர்கள் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஓம்பிரகாஷ் (வயது 55), யாகேஷ் (36), ராம்ஹரி (50), ராஜேஷ் (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த மற்றவர்கள், அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்