கோவா மாநில மக்களுக்கு தனியார் தொழிற்சாலைகளில் 80 சதவீத இடஒதுக்கீடு

கோவா மாநில மக்களுக்கு தனியார் தொழிற்சாலைகளில் 80 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-07-31 21:30 GMT
பனாஜி,

ஆந்திராவை தொடர்ந்து, கோவா மாநிலத்திலும் தனியார் தொழிற்சாலைகளில் அந்த மாநில மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவா மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில், மாநில மக்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று, மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, 80 சதவீத ஒதுக்கீட்டில் 60 சதவீதம் பேருக்கு நிரந்தர பணி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதுபோன்ற இடஒதுக்கீடு வழங்குவதற்கு தனி கொள்கை உருவாக்குவது அவசியம் என்பதால் இன்னும் 6 மாதங்களில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கைகள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் முதல்-மந்திரி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “தனியார் தொழிற்சாலைகள் மாநில அரசிடம் இருந்து பல்வேறு மானியங்களை பெறுகின்றன. எனவே அந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் இந்த மாநில மக்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்