அவதூறு வழக்கில் பாட்னா கோர்ட்டில் ராகுல் காந்தி ஆஜராகி ஜாமீன் பெற்றார்
அவதூறு வழக்கில் பாட்னா கோர்ட்டில் ராகுல் காந்தி ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
பாட்னா,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின்போது, “நரேந்திர மோடி, நிரவ் மோடி, லலித் மோடி என ஏன் எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற துணை பெயர் இருக்கிறது” என்று பேசினார். இதுதொடர்பாக பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா தலைவருமான சுஷில் மோடி பாட்னா கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்தி நேற்று மதியம் பாட்னா கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் கோர்ட்டில் ஜாமீன் பெற்றார்.
பின்னர் கோர்ட்டுக்கு வெளியே ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் நாட்டில் உள்ள ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் போராடி வருகிறேன். அவர்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்பதை காட்டவே இங்கு வந்திருக்கிறேன்.
மோடி அரசை எதிர்த்தோ, பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை எதிர்த்தோ யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு கோர்ட்டு வழக்குகள் மூலமாக தொந்தரவு கொடுத்துவருகிறார்கள். ஆனாலும் எனது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி சில நாட்கள் முன்பு ராஜினாமா செய்ததால், பாட்னா கோர்ட்டுக்கு வெளியே ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூடியிருந்தனர். ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி டுவிட்டரில், “எனது அரசியல் எதிரிகளான பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் என்னை அச்சுறுத்தவும், தொந்தரவு கொடுக்கவும் என் மீது தொடர்ந்த மற்றொரு வழக்கில் பாட்னா கோர்ட்டில் நான் நேரில் ஆஜரானேன். வாய்மையே வெல்லும்” என்று கூறி உள்ளார்.