புல்வாமாவில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் குண்டுவீச்சு

புல்வாமாவில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியுள்ளனர்.

Update: 2019-06-18 15:43 GMT
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை தொடர்ந்து பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ஆனந்த்நாக்கில் இரு பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடிய நிலையில், புல்வாமாவில் காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. குண்டு தடுமாறி சாலையோரத்தில் விழுந்து வெடித்தது. இதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை தேடும் வேட்டையும் நடக்கிறது.

மேலும் செய்திகள்