வட மாநிலங்களில் கடுமையான வெயில்: பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் - ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள்

வெயிலின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

Update: 2019-06-16 05:44 GMT
புதுடெல்லி,

தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வட மாநிலங்களில் கடுமையான வெயில் தாக்கம் உள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் 30 பேர் பலியானார்கள்.

இதற்கிடையே, பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், வெயிலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில்  மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

வெயிலின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர். மற்றும் பாட்னாவில் வெயில் தாக்கத்தால் 12 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. வெயிலின் கடுமையான வெப்பம் பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மந்திரி அறிவுறுத்தியுள்ளார். 

மேலும் செய்திகள்