17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

Update: 2019-06-16 05:32 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவை அடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர், நாளை 17-ந்தேதி தொடங்குகிறது.

முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.  இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.  19-ந்தேதி, சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும். 

20-ந்தேதி, இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 5-ந்தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

ஜூலை 26-ந்தேதிவரை கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்தலாக் தடை உள்பட 10 அவசர சட்டங்களை மசோதாக்களாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த முதல் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு விரும்புகிறது.

மேலும் செய்திகள்