காஷ்மீர் புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2019-06-14 11:07 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா அருகில் உள்ள ப்ரா பண்டினா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்