கடும் தண்ணீர் தட்டுப்பாடு: கர்நாடக அரசு பள்ளிகளில் மதிய உணவு நிறுத்தம்

கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கர்நாடக அரசு பள்ளிகளில் மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-05-31 20:49 GMT
உடுப்பி,

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு சமைப்பது நிறுத்தப்பட்டது.

தண்ணீர் பஞ்சத்தால் பள்ளி நேரம் காலையில் முன்கூட்டியே தொடங்கி மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் பள்ளி மாணவர்கள் உணவை தாங்களே கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்