மகாராஷ்டிராவில் லாரியின் டயர் வெடித்து விபத்து; 13 பேர் பலி

மகாராஷ்டிராவில் லாரி ஒன்றின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-05-20 14:54 GMT
மகாராஷ்டிராவின் கட்ச் நகரில் இருந்து நாக்பூர் நோக்கி உப்பு ஏற்றப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலை 6ல் சென்று கொண்டிருந்தது.  அந்த லாரி மல்காபூர் பகுதியில் வந்தபொழுது திடீரென அதன் டயர் வெடித்தது.

இதனை தொடர்ந்து அதன் ஓட்டுனர் லாரியின் கட்டுப்பாட்டினை இழந்து விட்டார்.  இதனால் அருகில் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்றின் மீது லாரி விழுந்தது.  இதில் 13 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களில் 5 பேர் பெண்கள்.  3 பேர் குழந்தைகள்.  3 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோர் செங்கற்சூளை தொழிலாளர்கள் ஆவர்.  அவர்கள் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு தங்களது கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர்.  அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்