தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது- தலைமை தேர்தல் ஆணையர்
தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.
புதுடெல்லி
பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் தேர்தல் ஆணையர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது.தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியானது
எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது;-
தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது. முக்கிய விவகாரங்களில் தேர்தல் ஆணையர்கள் ஒரே மாதிரியான முடிவை எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற முரண்பாடான கருத்துக்கள் ஏற்பட்டு உள்ளன. ஒரு விவகாரம் குறித்து ஒவ்வொருவர் பார்வையில் வேறுவிதமான கருத்துக்கள் கடந்த காலங்களில் உருவாகி இருக்கின்றன,
3 பேர் கொண்ட குழுவில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது என்பது இயலாத ஒன்று. எந்த புகார் குறித்த பொது விவாதத்திற்கும் நான் எப்போதும் தயார். தற்போது தேர்தல் காலம் என்பதால் விவாதத்திற்கு நேரம் இல்லை என கூறி உள்ளார்.