110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்; 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்
2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 724 பெண் வேட்பாளர்களில் 110 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.
புதுடெல்லி
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது.
அதன்படி கடந்த மாதம் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கும், 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த 6-ந்தேதி 51 தொகுதிகளுக்கும், 12-ந் தேதி 6-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இறுதி 7 வது கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் . போட்டியிடும் வேட்பாளர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை அறிவித்திருக்கிறார்கள் இதில் கொலை மற்றும் கற்பழிப்பு சம்பந்தப்பட்டவையும் அடங்கும்.
தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்) ஆகியவற்றின் அறிக்கையின்படி, 724 பெண் வேட்பாளர்களில் 716 ன் வேட்பாளர்கள் அபிடவுட் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. எட்டு பெண் வேட்பாளர்களின் அபிடவுட் தெளிவற்று இருப்பதால் பகுப்பாய்வு செய்யப்படவில்லை.
தேர்தல் | பகுப்பாய்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் |
---|---|
முதல் கட்டம் | 94 |
2-வது கட்டம் | 124 |
3-வது கட்டம் | 142 |
4-வது கட்டம் | 96 |
5-வது கட்டம் | 80 |
6-வது கட்டம் | 84 |
7-வது கட்டம் | 96 |
மொத்தம் | 716 |
இந்த அறிக்கையின்படி, 110 பெண்வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். 78 பேர் தீவிர குற்றவியல் வழக்குகள் இருப்பதாக கூறி உள்ளனர். கற்பழிப்பு, கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், என குற்றச்சாட்டுகள் உள்ளன.
நான்கு பெண் வேட்பாளர்கள் கொலை வழக்குகள் (IPC பிரிவு 302). இருப்பதாக கூறி உள்ளனர். 16 பெண் வேட்பாளர்கள் கொலை முயற்சி வழக்கு இருப்பதாக கூறி உள்ளனர். (IPC Section-307).
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு இருப்பதாக பதினான்கு பெண்கள் வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர் - ஒரு பெண்ணின் சம்மதம் (IPC பிரிவு -313) இல்லாமல் கருச்சிதைவு ஏற்படுத்துவது.வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான வழக்குகளில் ஏழு பெண் வேட்பாளர்களின் பெயர்கள் வந்துள்ளன.
கட்சி வாரியாக ஆய்வு செய்யப்பட்டதில் காங்கிரசில் உள்ள 54 பெண் வேட்பாளர்களில் 14 பேரும், பா.ஜ.க.வில் 53 பேரில் 18 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் 24 பேரில் 2 பேரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 23 வேட்பாளர்களில் 6 பேரும், 222 சுயேட்சை பெண் வேட்பாளர்களில் 22 பேரும் தங்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.
தீவிரமான குற்ற வழக்குகள் காங்கிரஸ் கட்சியில் பத்து பெண் வேட்பாளர்கள் மீதும், பாரதீய ஜனதாவில் 13 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் 2 பேர் மீதும், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள 4 பேர் மீதும், 21 சுயேட்சை பெண்கள் வேட்பாளர்கள் மீது உள்ளன.
716 பெண் வேட்பாளர்களில், 255 பேர் கோடீசுவரர்களாக உள்ளனர். லோக் சபா தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு சராசரி சொத்துக்கள் 5.63 கோடி ரூபாய் வரை உள்ளது.
எண் | பெயர் | மாநிலம் | தொகுதி | கட்சி | அசையும் சொத்து | அசையா சொத்து | மொத்தம் | |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ஹேமாமாலினி | உ.பி | மதுரா | பாஜக | ரூ.25,85,62,856 | ரூ.2,24,97,07,436 | 2,50,82,70,292 250 கோடி | |
2 | சத்ய பிரபா | ஆந்திரா | ராஜம்பேட் | தெலுங்கு தேசம் | ரூ1,50,73,33,211 | ரூ.69,75,00,000 | 2,20,48,33,211 220கோடி | |
3 | ஹர்சிமிரத் கவுர் படேல் | பஞ்சாப் | பதிண்டா | சிரோன்மணி அகாலிதளம் | ரூ.1,00,30,02,445 | ரூ.1,17,69,17,425 | 2,17,99,19,870 217 கோடி |
பாஜகவின் ஹேமா மாலினி, தெலுங்கு தேசம் டி.ஏ.சத்ய பிரபா, சிரோன்மணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த ஹர்சிமிரத் கவுர் படேல் ஆகியோர் கோடீசுவரர்களாக உள்ளனர்.
இதற்கிடையில், எட்டு பெண் வேட்பாளர்கள் தங்கள் அபிடவுட்டில் தங்களுக்கு எந்த சொத்துக்களும் இல்லை என தெரிவித்து உள்ளனர்.
கல்வி விவரங்களில் பெண் வேட்பாளர்களில் 232 பேர் தங்கள் கல்வித் தகுதிகளை 5 வது பாஸ் மற்றும் 12-வது பாஸ் இடையே இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். 396 பேர் பட்டதாரி மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி கொண்டிருப்பதாக அறிவித்து உள்ளனர். 37 பெண்கள் வேட்பாளர்கள் கல்வி அறிவு உள்ளவர்கள் என்றும் 26 பெண்கள் வேட்பாளர்கள் படிக்காதவர்கள் என்றும் தெரிவித்து உள்ளனர். 2 பெண் வேட்பாளர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
வயது விவரங்களில் 531 பெண் வேட்பாளர்கள் தங்கள் வயது 25ல் இருந்து 50 க்குள் இருப்பதாகவும், 180 வேட்பாளர்கள் 51 முதல் 80 வயதிற்குள் என்றும் ஒரு வேட்பாளர் 80 வயதிற்கு மேல் என்றும் கூறி உள்ளனர். 3 வேட்பாளர்கள் தங்கள் வயதை தெரிவிக்கவில்லை. ஒரு வேட்பாளர் 25 வயதிற்குள் இருப்பதாக கூறி உள்ளார்.