59 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு - தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நாளை 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
புதுடெல்லி,
இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
பீகாரில் 8, ஜார்கண்டில் 3, சண்டிகாரில் 1, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13, உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்காளத்தில் 9 என மொத்தம் 59 தொகுதிகளில் நாளை 7-வது இறுதிக்கட்டதேர்தல் நடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி 7-ம் கட்ட தேர்தலை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் சந்திக்கிறார்.
மேற்கு வங்காளத்தில் வன்முறையை காரணம் காட்டி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு 9 தொகுதிகளில் பிரசாரத்தை தேர்தல் கமிஷன் முடிவுக்கு கொண்டு வந்தது.
எஞ்சிய 50 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் நேற்று மாலை 6 மணிக்கு ஓய்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இமாசலபிரதேச மாநிலம், சோலனில் கடைசி கட்ட பிரசாரம் செய்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம், மிர்சாப்பூரில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரமும் நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அரவக்குறிச்சியில் 8 இடங்களில் சூறாவளி பிரசாரம் செய்தார். பிற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 7-வது இறுதிக்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும், மாலை 6 மணிக்கு பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடைபெறும். அன்று மாலையில் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரியவந்து விடும்.