தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 - ம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 7-வது மற்றும் கடைசிக்கட்ட தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு சாதகமாக செயல்படுவதாக மாநில கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி அளிக்கிறது. அவரது பேரணிக்கு பிறகு பிரசாரம் நிறைவடைகிறது. தேர்தல் ஆணையம் முழுவதுமாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்பது இதில் இருந்து தெரிகிறது. இது நாட்டிற்கு மிகப்பெரிய பேராபத்து.
இவ்வாறு அவர் கூறினார்.