கொல்கத்தா வன்முறையை அடுத்து டுவிட்டரில் புகைப்படங்களை மாற்றிய திரிணாமுல் தலைவர்கள்
கொல்கத்தா வன்முறையை அடுத்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றியுள்ளனர்.
கொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது. அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. சிலையை உடைத்தது பா.ஜனதாவினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பா.ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது.
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை மாற்றியுள்ளனர். சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகர் புகைப்படத்தை தங்களுடைய அடையாள புகைப்படமாக திரிணாமுல் காங்கிரசார் வைத்துள்ளனர். பா.ஜனதாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ், தெரிக் ஒ பிரையன் ஆகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே பா.ஜனதாவை கண்டித்து போராட்டம் மேற்கொள்ளவும் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.