நாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தல்: முன்கூட்டியே வாக்குப்பதிவு நடத்த கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தலில், முன்கூட்டியே வாக்குப்பதிவு நடத்த கோரிய மனுவினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், வருகிற 19-ந்தேதி இறுதி கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது உள்ள நடைமுறையின் படி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், முஸ்லிம்களின் நோன்பு காலம் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு இறுதி கட்ட தேர்தலின் வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்கே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வக்கீல் முகமது நிஜாமுதீன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்பது சாத்தியமற்றது என தேர்தல் குழு கோர்ட்டில் பதில் அளித்தது. அதனை தொடர்ந்து, முகமது நிஜாமுதீன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முன்கூட்டியே வாக்குப்பதிவு நடத்தினால் தேர்தல் ஆணையம் தேவையற்ற நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.