டெல்லியில் சோனியா, ராகுல், சுஷ்மா ஓட்டுப்பதிவு
தலைநகர் டெல்லியில் சோனியா, சுஷ்மா சுவராஜ், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் ஓட்டுப்பதிவு செய்தனர்.
புதுடெல்லி,
இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 5 கட்ட தேர்தல் முடிந்து விட்ட நிலையில் நேற்று 6-வது கட்ட தேர்தல் நடந்தது.
தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்து நின்று தங்கள் வாக்குரிமையை செலுத்தினர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, டெல்லி நிர்மாண்பவனில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்பதிவு செய்தார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேராவும் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
பிரியங்கா ஓட்டுப்பதிவு செய்து விட்டு நிருபர்களிடம் பேசும்போது, “பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை விட்டுப்போவது தெளிவாகி விட்டது. மக்களிடம் கோபம் இருக்கிறது. மக்கள் துயரத்தின் பிடியில் உள்ளனர். பிரதமர் மோடி உண்மையான பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பதிலாக நோக்கம் எதுவும் இன்றி பொத்தாம்பொதுவாக பேசுகிறார். பாரதீய ஜனதா அரசு மீதான தங்கள் கோபத்தை மக்கள் வெளிப்படுத்துவர்” என குறிப்பிட்டார்.
பிரியங்கா, ராபர்ட் வதேரா தம்பதியரின் மகன் ரேகன் வதேரா (வயது 19), புதிய வாக்காளர் என்ற நிலையில் வாக்களிக்கவில்லை. அவர் தேர்வுக்காக லண்டன் சென்றுள்ளதாக பிரியங்கா கூறினார்.
மத்திய வெளியுறவு மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவுரங்கசீப் லேனில் என்.பி. சீனியர் செகண்டரி பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். அவர் நிருபர்களிடம் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி வெறுப்புணர்வை பயன்படுத்தினார். நாங்கள் மக்கள் மீதான அன்பை பயன்படுத்தினோம். அன்புதான் ஜெயிக்கும் என்று கருதுகிறேன்” என குறிப்பிட்டார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மனைவி மற்றும் மகளுடன் வந்து சிவில் லைன்ஸ் ஓட்டுச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். துணை முதல்-மந்திரி சிசோடியா பாண்டே நகரில் ஓட்டுப்பதிவு செய்தார்.
டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் நிஜாமுதீனிலும், கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி பா.ஜனதா வேட்பாளருமான கவுதம் காம்பீர் மனைவி நடாஷாவுடன் ராஜிந்தர் நகரிலும் ஓட்டுப்பதிவு செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியும், முன்னாள் தலைவர் கபில் தேவும் டெல்லியில் வாக்களித்த பிரபலங்கள் வரிசையில் சேர்கின்றனர்.
இந்தி பட உலக நட்சத்திரங்கள் ஸ்வரா பாஸ்கர், சித்தார்த் மல்கோத்ரா, டாப்சி, ஹூமா குரேஷி ஆகியோரும் டெல்லியில் வாக்குப்பதிவு செய்தனர்.