மும்பை விமான நிலையத்தில் ஏஎன் 32 ரக போர் விமானத்தில் திடீர் விபத்து

மும்பை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏஎன் 32 ரக போர் விமானம் திடீர் விபத்திற்குள்ளானது.

Update: 2019-05-08 09:58 GMT
மும்பை,

பெங்களுருவில் உள்ள யெலஹங்கா விமான படைத்தளத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் மும்பையில் இருந்து புறப்பட தயார் ஆனது. 

மும்பை விமான நிலையத்தில் 27-வது ஓடு தளத்தில் இருந்து போர் விமானம் சென்ற போது திடீரென பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

போர் விமான விபத்து காரணமாக, மும்பை விமான நிலையத்தில் 50 விமான சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்