பிரசார மேடையில் திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்காரி
மராட்டியத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மத்திய மந்திரி நிதின் கட்காரி பிரசார மேடையிலேயே திடீரென மயக்கம் அடைந்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ஷீரடியில் சிவசேனா வேட்பாளர் சதாசிவ லோக்ஹந்தேவை ஆதரித்து மத்திய நிதி மந்திரி நிதின் கட்காரி பிரசார மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
உரையை முடித்த பின்னர் அவர் தன் இருக்கையை நோக்கி நடந்து சென்ற போது திடீரென மயக்கம் அடைந்து கிழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.
இதனையடுத்து சிறிது நேரம் கழித்து எழுந்த நிதின் கட்காரி பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் தன் காருக்குள் சென்று அமர்ந்தார். பிரசார மேடையில் நிதின் கட்காரி மயக்கம் அடைந்த சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.