மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அலை வீசுவதால் முழு வெற்றி கிடைக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை
மேற்குவங்காளத்தில் பா.ஜனதா அலை வீசுவதால் முழுமையான வெற்றி கிடைக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புனியாட்பூர்,
மேற்குவங்காள மாநிலம் புனியாட்பூரில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மேற்கு வங்காளத்தில் மக்கள் எனக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். இங்கு பா.ஜனதா அலை மிகப்பெரிய அளவில் வீசுகிறது. இதன்காரணமாக முழுமையான வெற்றி கிடைக்கும். மேற்குவங்காளம் மட்டுமின்றி நாடே இந்த மாநிலத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழப்போகிறது என்று கூறுகிறது. முதல் 2 கட்ட தேர்தல்கள் வேகத்தடையான மம்தா பானர்ஜியின் தூக்கத்துக்கு ஒரு தடை போட்டுள்ளது.
பா.ஜனதாவினர் மீது வன்முறையில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் அதன் பலனை அனுபவிப்பார்கள். தீயசக்திகள் ஆட்சியில் இருப்பதால் இந்த மாநில அரசு முழுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் எதிர்காலமும், மாநில மக்களும் மம்தா பானர்ஜியை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
உத்தரபிரதேசம், அசாம் மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் சட்டம்-ஒழுங்கு நிலைமை முன்னேறியுள்ளது. ஆனால் இங்கு அத்தையும், மருமகனும் (மம்தா-அபிஷேக்) மாநில கலாசாரத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திவிட்டனர். தன் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நீதி வழங்க முதல்- மந்திரி தவறிவிட்டார்.
மாநில அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் வழங்கவில்லை, சம்பள கமிஷன் அறிவித்த சம்பளத்தையும் வழங்கவில்லை. ஆரம்பத்தில் நான் மம்தா பானர்ஜி நேர்மையின் மறுவடிவம் என்று நினைத்தேன். ஆனால் அவர் எப்போதும் ஊழல் மற்றும் பணம் பறிப்பவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார் என்பது பின்னர் தான் தெரிந்தது.
இந்த மாநில குண்டர்கள் ராஜ்ஜியத்தின் தோல்வி தேர்தல் முடிவில் எதிரொலிக் கும். மம்தா பானர்ஜிக்கு ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை. தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அவர் பயங்கரவாதிகளின் ஆதரவை பெறவும் தயங்க மாட்டார். மாநிலத்திற்குள் ஊடுருவியவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
மே 23-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதும் மத்தியில் மீண்டும் பா.ஜனதா அரசு பதவி ஏற்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பீகார் மாநிலம் போர்ப்ஸ் கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு சரியாக விசாரணை நடத்தவில்லை. தனது வாக்கு வங்கி அரசியலுக்காக விசாரணையை திசைதிருப்பிவிட்டது. அந்த கட்சிக்கு தேசபக்தியைவிட தனது வாக்குவங்கியும், தான் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதும் தான் முக்கியம். பாலகோட் வான் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மட்டுமல்ல, இங்குள்ள சில கட்சிகளும் ஆதாரம் கேட்கின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.