நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் அளிப்போம்’ - ராகுல் காந்தி பேச்சு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் 5 ஆண்டுகளில் ரூ.3½ லட்சம் அளிப்போம் என ராகுல் காந்தி கூறினார்.
பாஜிபுரா,
குஜராத் மாநிலம் பரிதோலி மாவட்டத்தில் உள்ள பாஜிபுரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தன்னை காவலாளியாக கூறி கொள்கிறார். ஆனால் ரபேல் ஒப்பந்த ஊழலில் காவலாளியே திருடனாக இருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை மோடி கொடுத்து இருக்கிறார்.
‘நியாய்’ (ஏழை மக்களுக்கு நிதி உதவி) திட்டத்தை செயல்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியில் உள்ள பொருளாதார வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது அவர்களிடம் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு எவ்வளவு கொடுக்கலாம் என கேட்டனர். அப்போது அவர்கள் ரூ.72 ஆயிரம் அளிக்கலாம் என்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதன்படி ரூ.72 ஆயிரம் ஏழை மக்களுக்கு நிதி உதவியாக அளிக்கப்படும். இதன் மூலம் ஏழை மக்களின் பொருளார நிலை மேம்படும். மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகும். நரேந்திர மோடி கடந்த தேர்தலின் போது ரூ.15 லட்சம் கொடுப்பதாக உங்களை ஏமாற்றினார். ஆனால் நாங்கள் 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் ரூ.3.60 லட்சம் கண்டிப்பாக அளிப்போம்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் கருப்பு பணத்தை அதிக அளவில் பதுக்கவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவர்கள் கொண்டு வந்தனர். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான்.
மோடியின் ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்தியதால் பல தொழில் நிறுவனங்கள் நலிவுற்றன. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. வேலையின்மை அதிகரித்தது. பெரிய தொழில் நிறுவனங் களுக்கு மட்டுமே மோடி அரசு உதவி வருகிறது.
ஏழை விவசாயிகளின் வீடுகளுக்கு காவலாளி தேவையா? அனில் அம்பானி போன்ற பெரிய தொழில் அதிபர்களுக்கு மட்டுமே மோடி அரசு காவலாளியாக இருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடனை கட்ட முடியாத விவசாயிகள் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படாது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகியவற்றில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.