தமிழகத்தில் பணப்பட்டுவாடா: தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

தமிழகத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக, தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Update: 2019-04-16 21:47 GMT
புதுடெல்லி,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. ரூ.10 ஆயிரம் கோடி வாக்காளர்களுக்கு கொடுக்க அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன. இதுதொடர்பாக செய்தியும், உளவுத்துறை தகவலும் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல இடங்களில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ்கன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு வழக்கை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்