வாக்காளர்களை 2 முறை ஓட்டுப்போட கூறிய பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. மீது வழக்கு
வாக்காளர்களை 2 முறை ஓட்டுப்போட கூறிய பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தானே,
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் 4 கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நவிமும்பை, பேலாப்பூர் தொகுதி பா.ஜனதா கட்சி பெண் எம்.எல்.ஏ. மன்தா மாத்ரே, பிரசார கூட்டத்தில் பேசும்போது.
’சத்தாரா பகுதியை சேர்ந்த பலர் இங்கு வேலை செய்து வருகின்றனர். எனவே நீங்கள் முதலில் சொந்த ஊருக்கு சென்று அங்கு சிவசேனா- பா.ஜனதா கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். பின்னர் இங்கு திரும்பி வந்து 29-ந் தேதி நடக்கும் தேர்தலில் தானே நாடாளுமன்ற தொகுதி சிவசேனா வேட்பாளருக்கு வாக்களியுங்கள்‘ என பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. மன்தா மாத்ரே மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் கோபர்கைர்னே போலீசார் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.