தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தல் வருகிற 18ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம், பேரணி மற்றும் பொது கூட்டங்களை அரசியல் கட்சிகள் நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.
தேர்தலை அடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை வாகன சோதனை நடத்தி பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.
இதன்படி இந்தியா முழுவதும் ரூ.2,604.40 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ரூ.510.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.