மே 23-ம் தேதி மோடி முன்னாள் பிரதமராவார் -அகமது படேல்

மே 23-ம் தேதி பிரதமர் மோடி முன்னாள் பிரதமராவார் என காங்கிரஸ் தலைவர் அகமது படேல் கூறியுள்ளார்.

Update: 2019-04-16 09:34 GMT
17-வது நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் மே மாதம் 23-ம் தேதி வெளியாகும். இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகமது படேல் பேசுகையில், பா.ஜனதாவின் அரசியலால் மிகவும் துன்புறுத்தப்பட்டுள்ள மக்கள், அவர்களுக்கு எதிராக ஏப்ரல்-மே தேர்தலில் வாக்களிப்பார்கள். குஜராத்தில் உள்ள மொத்தம் 25 தொகுதிகளில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றிப்பெறும்.

மே 23-ம் தேதி பிரதமர் மோடி முன்னாள் பிரதமராவது உறுதி. தேர்தலில் வெற்றிப்பெற்ற பின்னர் மகா கூட்டணி பிரதமரை தேர்வு செய்யும் என கூறியுள்ளார். 

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் காங்கிரஸ் தலைவர்கள் உயிர்நீத்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு பா.ஜனதா எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். பா.ஜனதா வேண்டுமென்றால் பயங்கரவாதத்தில் அரசியல் நடத்த பார்க்கும்  என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்