2019 மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் வெளியிட்டனர்
2019 மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர். #BJPSankalpPatr2019
புதுடெல்லி,
மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பாஜக தேர்தல் அறிக்கையின் பெயர் "சங்கல்ப் பத்ரா". பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் என கூறினார்.
தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.
48 பக்கங்கள் அடங்கிய அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
* புதிய பாரதத்தை நோக்கி பாஜகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. 130 கோடி மக்களுக்கும் இந்த தேர்தல் அறிக்கை திருப்தி அளிக்கும்.
* மோடி தலைமையிலான அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.
* மக்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்குவதில் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது.