கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்; பா.ஜனதா வெற்றியை பதிவு செய்ய வாய்ப்பு - கருத்துக்கணிப்பு

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் எனவும், பா.ஜனதாவும் வெற்றியை பதிவு செய்ய வாய்ப்பு எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Update: 2019-04-05 09:38 GMT

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் எனவும், பா.ஜனதாவும் வெற்றியை பதிவு செய்ய வாய்ப்பு எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கேரளாவில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 20. அங்கு காங்கிரஸ் கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. கேரளாவில் ஆளும் கூட்டணிக்கு சபரிமலை விவகாரம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுவரை கேரளாவில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஒருவர் கூட நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. பா.ஜனதா இப்போது கூட்டணியாக களமிறங்கியுள்ளது.

மாநிலத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் எனவும், பா.ஜனதாவும் வெற்றியை பதிவு செய்ய வாய்ப்பு எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மலையாள மனோரமா பத்திரிக்கை, கார்வி நிறுவனத்துடன் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று இடங்களில் கடும் போட்டி நிலவும், அதில் 2 இடங்களை காங்கிரஸ் அணி பெற வாய்ப்புள்ளது. மாநிலத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி 4 இடங்களில் மட்டுமே வெல்லும். திருவனந்தபுரம் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில்  போட்டியிடும் அறிவிப்பு வெளியிடப்படும் முன்பாக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் தொகுதியில் கடந்த 2014 தேர்தலில் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவியது. இம்முறை பா.ஜனதா வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என்ற தகவல் காங்கிரஸ் தலைவர் சசிதரூருக்கு எச்சரிக்கையாக எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்