பாராளுமன்ற தேர்தல் : நாடு முழுவதும் ரூ.377 கோடி பணம் பறிமுதல்; தமிழகம் முதலிடம்
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடந்த சோதனையில் ரூ.377 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. மே - 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணிகளில் தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இதில் தொடக்க கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான பட்டியலை இரு கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.
தேர்தலையொட்டி, ஏப்.3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளில், கணக்கில் வராத ரூ.377.115 கோடி ரொக்கப் பணம், ரூ.157 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.705 கோடி மதிப்புள்ள மருந்து மற்றும் போதை பொருள்கள், ரூ.78 லட்சம் லிட்டர் மதுபான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ. 127.84 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும், தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து, ஏப். 3 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் நடத்திய அதிரடி சோதனைகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.377.115 கோடி ரொக்கப் பணம், ரூ.157 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.705 கோடி மதிப்புள்ள மருந்து மற்றும் போதை பொருள்கள், ரூ.78 லட்சம் லிட்டர் மதுபான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக, ரூ.127.84 கோடி தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் 78 லட்சம் லிட்டர் மதுபானங்களும், பஞ்சாபில் ரூ.116 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவைத்தவிர ரூ. 312 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட பணத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பறிமுதல் செய்யப்பட்டவை 84 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் சுமார் 31,000 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது. தற்போது தேர்தலுக்கு முன்பாகவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள மதுபானங்கள் அளவில் 2 சதவீதம் மட்டுமே.
2014-ல் ரூ. 780 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டன, இது ஏறத்தாழ சுமார் ரூ.116 கோடி போதை மருந்துகள் பஞ்சாபில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் வெளியிட்ட புள்ளி விவரங்கள் முற்போக்கான கைப்பற்றப்பட்ட எண்கள் ஆகும், அதாவது அது வரவிருக்கும் நாட்களில் அதிகரிக்கும் என்றும், 50 நாட்களுக்கு மேலாக தேர்தல் முடிவடையும் வரை என்ற உண்மையைக் கூறலாம்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தல் முடிவில் ரூ.299.94 கோடி பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த நிலையில், 17-வது மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க தங்கம் உள்ளிட்ட இலவசங்கள் அளிப்பதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதிகளவு உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு சென்றதில் 2வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது தமிழகம்.
அருணாச்சல பிரதேச முதல்வருடன் கட்சியினர் வந்த காரில் இருந்து ரூ.18 கோடியை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது. தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 கோடியே 47 லட்சத்து 100 பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக இவ்வளவு தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் முடிவடைய இன்னும் 50 நாட்களுக்கு மேலாக உள்ளதால் வரவிருக்கும் நாட்களில் பறிமுதல் செய்யப்படும் பணம், போதைப்பொருட்கள், மது பானங்கள், பரிசுப்பொருட்களின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.