ராஜஸ்தான் கவர்னரின் பேச்சு தேர்தல் விதி மீறல் என தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக தகவல்
ராஜஸ்தான் கவர்னரின் பேச்சு தேர்தல் விதி மீறல் என தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
புதுடெல்லி,
ராஜஸ்தான் மாநில கவர்னராக இருந்து வரும் கல்யாண்சிங், சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமராக மீண்டும் மோடியே வர வேண்டும். அவரே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கருத்தை வெளியிட்டிருந்தார்.
மக்களவை தேர்தல் நேரத்தில் ஒரு அரசு உயர் அந்தஸ்து பதவி வகிக்கும் கவர்னர் இவ்வாறு பேசுவது தேர்தல் விதிமுறை மீறலாகும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அத்துடன் கவர்னர் குறித்து ஜனாதிபதிக்கும் புகார் கடிதம் எழுத முடிவு செய்துள்ளது.
இன்று நடைபெறும் தேர்தல் ஆணையக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.