இந்திய கப்பற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் நியமனம்

இந்திய கப்பற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2019-03-23 09:34 GMT
புதுடெல்லி,

இந்திய கப்பற்படையின் தளபதியாக சுனில் லம்பா பதவி வகித்து வருகிறார்.  இந்த நிலையில் அவரது பதவி காலம் வருகிற மே 31ந்தேதியுடன் முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து துணை தளபதியாக உள்ள கரம்பீர் சிங் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட உள்ளார் என பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  இவர் இந்தியாவின் மிக பெரிய மற்றும் முதல் கப்பற்படை தளம் என பெயர் பெற்ற விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கப்பற்படையின் தலைவராக இருந்து வருகிறார்.

மேலும் செய்திகள்