ஒடிசாவில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

Update: 2019-03-18 10:09 GMT
2019 நாடாளுமன்றத் தேர்தலுடன், ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. மாநிலத்தில் ஆளும் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்திற்கு எதிராக காங்கிரசும், பா.ஜனதாவும் வியூகத்துடன் களமிறங்கியுள்ளது. மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் 2000-ம் ஆண்டிலிருந்து  கடற்கரை மாவட்டமான கஞ்சம் மாவட்டத்தின் ஹின்ஜிலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று வருகிறார். இப்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நவீன் பட்நாயக் ஹின்ஜிலி தொகுதியுடன் பிஜிபூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் மொத்தம் 21 பாராளுமன்றத் தொகுதிகளும், 147 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளது. பிஜு ஜனதா தளம் இன்று முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. 9 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு தொகுதிகளில் நவீன் பட்நாயக் போட்டியிடுகிறார். மாநிலத்தில் மும்முனைப்போட்டி தீவிரமாக இருக்கும், பா.ஜனதாவின் ஆதிக்கம் இம்முறை அதிகமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்