எல்லையில் அதிக படைகளை குவிக்கிறது, பாகிஸ்தான்

எல்லையில் அதிக படைகளை பாகிஸ்தான் குவித்து வருகிறது.

Update: 2019-03-06 21:45 GMT
புதுடெல்லி,

பாலகோட் முகாம் மீதான இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் அதிக படைகளையும், ராணுவ தளவாடங்களையும் குவித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்த தனது படைகளை காஷ்மீர் எல்லை பக்கம் பாகிஸ்தான் திருப்பி விட்டுள்ளது. அதே சமயத்தில், பாகிஸ்தான் எத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டாலும் தக்க பதிலடி தரப்படும் என்று இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்