விமான தாக்குதலில் சந்தேகம் உள்ளோர் பாகிஸ்தான் சென்று உடல்களின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.

இந்திய விமான படை தாக்குதல் பற்றி சான்றுகள் கேட்போர் பாகிஸ்தான் சென்று உடல்களின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள் என தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Update: 2019-03-05 13:44 GMT
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர்.

இதனை தொடர்ந்து கடந்த 26ந்தேதி, பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது.  இந்த தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

ஆனால் இந்த எண்ணிக்கையின் உண்மை தன்மை பற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா சிங் பேசும்பொழுது, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பெயரை குறிப்பிட்டு, இவர்கள் அனைவரும் இந்திய விமான படை தாக்குதல் பற்றி எங்களுக்கு சான்று வேண்டும் என கேட்கின்றனர்.

அதனால் நாம் அனைவரும் தலா ரூ.100 பணம் சேர்த்து, இவர்களுக்கு டிக்கெட்டுகள் வாங்கி கொடுப்போம்.  இந்திய விமான படை மீது சந்தேகம் உள்ளவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும்.  அங்கு பலியானவர்களின் உடல்களின் எண்ணிக்கையை அவர்கள் கணக்கிடட்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், தேசிய விவகாரங்களில் அரசியல் செய்வது என்பது தவறானது.  தீவிரவாதத்தினை கட்டுப்படுத்த தைரியமிக்க படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி உள்ளன.  மோடிஜி இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்