உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அன்னா ஹசாரேவுக்கு உடல்நலம் பாதிப்பு

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அன்னா ஹசாரேவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-02 05:23 GMT
மும்பை,

அரசு பணியாளர்கள் மீதான ஊழலை ஒழிக்க மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த சட்டம் மத்தியிலும், பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் மத்தியில் லோக்பால் மற்றும் மராட்டியத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 30 ஆம் தேதி  காந்தியவாதி அன்னாஹசாரே தனது சொந்த கிராமமான அகமத்நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரதம் இருந்து வரும் 80 வயதான அன்னாஹசாரேவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று (வெள்ளிக்கிழமை) அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள்,  ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஹசாரே தற்போது  மிகவும் சோர்ந்து காணப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்