தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் - மன்மோகன் சிங் விமர்சனம்

தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

Update: 2019-02-01 16:05 GMT
புதுடெல்லி,

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

நடைபெற உள்ள தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். இது ஒரு தேர்தல் பட்ஜெட். விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அளித்துள்ள சலுகைகள் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும்  விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகள்