குக்கர் சின்னம் ஒதுக்க கோரி டி.டி.வி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு: 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது
குக்கர் சின்னம் ஒதுக்க கோரி டி.டி.வி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது;
புதுடெல்லி,
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு கோரி டி.டி.வி.தினகரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும், அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கூறப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, இந்த மனு தாக்கல் செய்துள்ள விவரத்தை கூறி, மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வரும் 7-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.