ரபேல் ஒப்பந்த விவாதத்தின் போது ஜெட்லியை நோக்கி பறந்த பேப்பர் விமானங்கள்!
ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தின் போது ஜெட்லியை நோக்கி பேப்பர் விமானங்கள் பறந்தது.;
பாராளுமன்ற மக்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜனதா தலைவர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் அருண் ஜெட்லியை நோக்கி பேப்பர் விமானங்களை பறக்கவிட்டது மழலையர் பள்ளியை நினைவுக்கு கொண்டுவரும் வகையில் அமைந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மாணவர்களை போன்று சத்தம் போட்ட நிலையில், ஒரு ஆசிரியை போன்று சுமித்ரா மகாஜன் அவர்களை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டார். பள்ளியில் குழந்தைகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் சிரித்துக்கொண்டே தங்களுடைய செயலில் தீவிரம் காட்டும் போது, ஆசிரியர் அமைதியை கொண்டுவர முயற்சிப்பார். அதுபோன்ற நிகழ்வு இன்றைய பாராளுமன்ற கூட்டத்தில் நடந்தது.
அருண் ஜெட்லியை நோக்கி பேப்பர் விமானங்கள் பறந்தபோது, “நீங்கள் என்ன குழந்தைகளா? இதனை உங்களுடைய குழந்தை பருவத்தில் செய்யவில்லையா?” என்று காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்துக்கொண்டார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் சுஷ்மிதா தேவ், ராஜீவ் சாதவுக்கு கவனம் தேவையென்று கேட்டுக்கொண்டார்.
விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் எம்.பி. குர்ஜீத் சிங் பேப்பர்களை அருண் ஜெட்லியை நோக்கி வீசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நிர்மலா சீதாராமன் புகார் தெரிவித்தார்.