காற்று மாசுபாடு: டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு பிரச்சனையை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-03 10:00 GMT
டெல்லி,

நாட்டின் தலைநகராக விளங்கும் டெல்லியில் நாளுக்கு நாள் சுற்றுசூழலும், காற்றின் தரமும் மாசுபடுவது அதிகரித்து வருவதால் பலருக்கு மூச்சு தினறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. 

பனிப்புகை மற்றும் காற்று மாசுபாடு அபாய அளவுக்குச் சென்றதால் கடந்த 7-ம் தேதி சுகாதார அவசர நிலையின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

இந்நிலையில், இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையை மேற்கொண்ட பசுமை தீர்ப்பாயம், காற்று மாசுபாடு பிரச்சனைகளை கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

அத்துடன். இந்த அபராத தொகையை டெல்லி அரசு அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய மக்களிடம் இருந்தும் வசூலித்து செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

மேலும்  அபராத தொகையை செலுத்த தவறினால் மாதந்தோறும் ரூ.10 கோடி செலுத்த வேண்டி வரும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்