அசாமில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரெஸ் ரெயிலில் குண்டுவெடிப்பு; 11 பேர் காயம்
அசாமில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரெஸ் ரெயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர்.;
உதல்குரி,
காமக்கியாவில் இருந்து தேகர்காவன் நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரெஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் அசாமில் உதல்குரி நகரில் ஹரிசிங்கா பகுதியில் வந்தபொழுது அதன் பெட்டி ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் 11 பேர் காயமடைந்து உள்ளனர். பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.