வாரணாசி வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: தள்ளுபடி செய்யாததால் வாக்குவாதம் ஏற்பட்டது என தகவல்
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ஷாப்பிங் மாலில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.;
வாரணவாசி,
உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள காண்ட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜே.ஹெச்.வி வணிக வளாகத்தில் தீபாவளியை ஒட்டி புத்தாடைகள் வாங்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, துணி வாங்க வந்த 2 பேர் தள்ளுபடி தொடர்பாக விற்பனையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதை அடுத்து, அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், விற்பனையாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.