டோக்லாம் விவகாரம் : “56 அங்குல மனிதரிடம் திட்டம் இருக்கும்” என ராகுல் காந்தி கிண்டல்

டோக்லாம் விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருந்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து “நமது 56 அங்குல பலம் வாய்ந்த மனிதரிடம் ஒரு திட்டம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என கிண்டல் செய்துள்ளார்.

Update: 2018-03-27 23:45 GMT
புதுடெல்லி,

இந்தியா, பூடான், சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத் ஆகியவற்றின் முச்சந்தியாக விளங்குவது டோக்லாம். இங்கு அடிக்கடி சீனா படைகளை குவித்து பதற்றம் ஏற்படுத்துவது வழக்கமாக அமைந்து உள்ளது.

கடந்த ஆண்டும் இதே போல டோக்லாம் பகுதியில் சீனா படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு படைகளை குவித்தது. 73 நாட்கள், படைகள் குவிப்பால் பதற்றம் நீடித்தது. பின்னர் இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொண்டன.

இப்போது மீண்டும் டோக்லாம் பகுதியில் சீனா படை குவிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்கிற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர், “டோக்லாமில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சீனா சொல்கிறது. கடந்த வாரம் எனது டுவிட்டர் கருத்து வாக்கெடுப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். டோக்லாம் பிரச்சினையில் 63 சதவீதம் பேர் மோடி கட்டித்தழுவும் ராஜதந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறினர்” என்று தெரிவித்து உள்ளார்

மேலும், “நமது 56 அங்குல பலம் வாய்ந்த மனிதரிடம் (பிரதமர் மோடி) ஒரு திட்டம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.



மேலும் செய்திகள்