முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தையை கத்தியால் குத்தி பணம் பறிப்பு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவின் தந்தையை கத்தியால் குத்தி 2 வாலிபர்கள் பணம் பறித்து உள்ளனர்.

Update: 2017-07-17 09:50 GMT
ரோதக்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா.இவரது தந்தை  ஓம் பிரகாஷ் சர்மா . இவர் ரோதக்கில் உள்ள காத்மாண்டியில்  மிட்டாய் கடை வைத்து உள்ளார்.

சனிக்கிழமை இரவில் 2 வாலிபர்கள் அவரது கடைக்கு வந்து குளிர்பானம் மற்றும் சிகரெட் வாங்கி சென்றார்கள். பின்னர் இருவரும் திரும்பி வந்து  சர்மாவை தாக்கி உள்ளனர்.

இது குறித்து  போலீசில்  ஓம் பிரகாஷ் சர்மா புகார் அளித்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

 முதலில் அந்த வாலிபர்கள் எனது பாகெட்டில் இருந்து பணம் பறிக்க முயன்றார்கள்  நான் அதை தடுத்தேன்.  வாலிபர்களில் ஒருவன் கத்தியை எடுத்து எனது வயிற்றில் குத்தினான்.   நான் எனது கையால் தடுத்தேன்.  2 நபர்களும் எனது கடைக்குள் நுழைந்து  அங்கிருந்த 7 ஆயிரம் பணத்தை  எடுத்து விட்டு என்னை கடைக்குள் போட்டு வெளியே பூட்டிச் சென்றனர்.  நான் ஏனது மன்கன் தீபக்கை அழைத்தேன் அவன் வந்து கதவை உடைத்து என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளான். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ஓம் பிரகாஷ் சர்மாவின் மகன் தீபக் கூறியதாவது:-

அவரது கை மற்றும் வயிற்று பகுதியில் கத்தி குத்து காயம் உள்ளது. இப்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டார் என கூறினார்.

 இது குறித்து போலீசார்   2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்தச் சமப்பவம் குறித்து அருகில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

2007 ஆம் ஆண்டு டி -20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை  வெல்ல  ஜோகிந்தர் சர்மா பந்து வீச்சு காரணமாக இருந்தது. தற்போது இவர் ஹிசர் மாவட்ட  துணை போலீஸ் சூப்பிரெண்டாக உள்ளார்.

மேலும் செய்திகள்