சசிகலா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டவை அனைத்தும் போலி ஆவணங்கள் ஓபிஎஸ் அணி புகார்
சசிகலா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டவை அனைத்தும் போலி ஆவணங்கள் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி புகார் செய்துள்ளது.
புதுடெல்லி
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான பிரச்சினையில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் தேர்தல் கமிஷனிடம் மேலும் 1½ லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அ.தி.மு.க. பிளவுபட்டதால் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்து உள்ளது. சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. (அம்மா) அணியினரும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் கமிஷனிடம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வருகிறார்கள்.
எவ்வளவு பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய முடியுமோ, அவ்வளவு பத்திரங்களை தாக்கல் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இரு அணியினரும் போட்டி போட்டு பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் ஏற்கனவே 7 லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யபட்டு உள்ளது. மேலும் 3 லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சசிகலா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டவை அனைத்தும் போலி ஆவணங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மைத்ரேயன் மற்றும் மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன் எம்.பி, சசிகலா அணி லட்சக்கணக்கில் தாக்கல் செய்துள்ளவற்றில் பல போலியான ஆவணங்கள். வேண்டுமென்றே கால தாமதம் ஏற்படுத்தும் விதமான மேலும் காலஅவகாசம் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார்கள் இதனை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மனோஜ்பாண்டியன் சசிகலா அணி அளித்துள்ள பத்திரங்கள், கையெழுத்துகள் போலியானவை என்று ஆதாரத்துடன் தேர்தல் ஆணயைத்திடம் அளித்துள்ளோம். போலி ஆவணங்களை தயாரித்தவர்கள் அவர்களுக்கு துணை நின்றவர்கள் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.