கேரளா: கலாம் அருங்காட்சியகம் நாளைத் திறப்பு
முன்னாள் குடியரசுத் தலைவரும் பிரபல விண்வெளி அறிவியலருமான ஏபிஜே அப்துல் கலாமிற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் நாளை திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்
டாட்கர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் & ஸ்பேஸ் மியூசியம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகமே தென் இந்தியாவில் முதல் முறையாக இந்த வகையைச் சார்ந்த அருங்காட்சியகம் ஆகும்.
இந்த அருங்காட்சியகத்தில் இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் கலாம் அவர்களின் தனிப்பட்ட நினைவுப் பொருட்கள், ஏராளமான அரிய புகைப்படங்கள் ஏவுகலங்களின் சிறிய வடிவ மாதிரிகள், அதேபோல செயற்கைக்கோள்கள், அவரது பிரபலமான மேற்கோள்கள் இடம் பெறுகின்றன.
கலாம் அவர்களின் கோட்பாடுகளை பிரபலப்படுத்தும் அமைப்பான டாக்டர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கே சிவன், இயக்குநர், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், வி சசி கேரள பேரவையின் துணைத் தலைவர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
இந்த அருங்காட்சியகத்தை அமைக்கும் அமைப்பின் தலைமை செயல் இயக்குநர் ஷாய்ஜூ டேவிட் அல்ஃபி, “இந்த அருங்காட்சியகத்தை அர்ப்பணிப்பதன் மூலம் நமது முன்னாள் குடியரசுத் தலைவரின் உயர்த்தன்மைகளை வருங்கால இளைஞர்கள் அவரின் வாழ்க்கையை பின்பற்றி அடைய வேண்டும் என்பதே” என்றார்.