இந்த ஆண்டுக்குள் 200 ரூபாய் நோட்டு வெளியீடு ரிசர்வ் வங்கி தகவல்

இந்த ஆண்டு இறுதிக்குள் 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரம் தெரிவித்துள்ளது.;

Update:2017-07-05 03:45 IST
புதுடெல்லி, 

500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்தபின்னர், புதிதாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. இதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளே அதிக புழக்கத்தில் இருப்பதால் சில்லரை தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. எனவே ரிசர்வ் வங்கி நிதித்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி விரைவில் ஒரு அறிவிப்பு வெளியிடும் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறினார். 

மேலும் செய்திகள்