ரூ.20-க்காக நடந்த சண்டையில் பெண் எரித்து கொலை

ரூ.20-க்காக நடந்த சண்டையில் பெண் எரிந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-25 18:45 GMT

ராய்ச்சூர்-

ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா கீதபால்யா கிராமத்தை சேர்ந்தவர் ருக்கம்மா (வயது 40). அதே கிராமத்தில் மளிகைக்கடை நடத்தி வருபவர் மல்லம்மா. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மல்லம்மாவின் கடையில் ருக்கம்மாவின் மகள் கீதா பொருட்களை வாங்கிவிட்டு மீதம் ரூ.20-ஐ எடுத்து சென்று உள்ளார். ஆனால் அந்த ரூ.20 நோட்டு கிழிந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த ரூ.20 நோட்டை எடுத்து கொண்டு மல்லம்மா கடைக்கு சென்ற ருக்கம்மா அந்த நோட்டை மாற்றி தரும்படி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மல்லம்மாவுக்கும், ருக்கம்மாவுக்கும் இடையே தகராறு உண்டானது. அப்போது கடையில் இருந்த எரிந்து கொண்டிருந்த மண்எண்ணெய் விளக்கை எடுத்து ருக்கம்மாவை, மல்லம்மா அடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேர் மீதும் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த 2 பேரும் ராய்ச்சூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ருக்கம்மா பரிதாபமாக இறந்தார். மல்லம்மாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சிந்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்