இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த தனியார் நிறுவன ஊழியர்; போலீஸ் தேடுகிறது

குடும்ப தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்ற நேரத்தில் இளம்பெண்ணை 2-வதாக தனியார் நிறுவன ஊழியர் திருமணம் செய்து கொண்டார்.

Update: 2023-02-04 18:45 GMT

உப்பள்ளி:

குடும்ப தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்ற நேரத்தில் இளம்பெண்ணை 2-வதாக தனியார் நிறுவன ஊழியர் திருமணம் செய்து கொண்டார்.

இளம்பெண்ணுடன் திருமணம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா அசோக் நகர் அருகே உள்ள மகாதேவ் நகரை சேர்ந்தவர் அனுமந்தா(வயது33). இவருடைய மனைவி நேத்ரா. அனுமந்தா உப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரா, தனது கணவரிடம் கோபித்து விட்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே அனுமந்தாவுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் ேநற்்று அதேப்பகுதியில் உள்ள கோவிலில், வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

வலைவீச்சு

இதையடுத்து அனுமந்தா இளம்பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டது நேத்ராவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் நேத்ரா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே போலீஸ் தேடுவதை அறிந்த அனுமந்தா மற்றும் இளம்பெண் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்