நடிகர் ஷாருக்கான் வீட்டிற்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள்... மும்பை போலீசார் விசாரணை
2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் அமைந்துள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்தனர். நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த 2 பேரையும் பாதுகாவலர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 20 முதல் 22 வயதுக்குட்பட்ட அந்த இருவரும், தாங்கள் குஜராத்தில் இருந்து வந்ததாகவும், ஷாருக் கானை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் கூறினர்.
அவர்கள் இருவர் மீதும் அத்துமீறல் மற்றும் பிற தொடர்புடைய குற்றங்களில் வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.