ஜம்மு காஷ்மீரில் 40 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் கடந்த 40 நிமிடங்களில் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு ,
ஜம்மு காஷ்மீரில் 40 நிமிடங்களில் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3.4 மற்றும் 2.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. முதல் நிலநடுக்கம் அதிகாலை 3.28 மணிக்கும், காலை 4.07 மணிக்கு மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கத்ரா, தோடா, உதாம்பூர், கிஸ்தவார் உள்ளிட்ட மாவட்டங்களும் லேசான குலுங்கின.